Thursday, 24 March 2011

நேற்று .. சிறுகதை

மாலை ஆறு மணி., அழையா விருந்தாளிகலான கொசுக்கள் வீட்டினுள் படை எடுத்த வண்ணம் இருந்தன . எங்கள் வீட்டு ஆடுகளும் , மேய்ச்சல் முடிந்து வீட்டிற்கு திரும்பிய வண்ணம் இருந்தன. நானும் என்னுடைய மூன்று நாள் விடுமுறை கழிந்து இரவு 9.15 மணி பஸ்சை பிடிக்க யோசித்த வண்ணம் கொசு அதிகமென்பதால், எங்கள் வீடு வாசலில் சேரில் உட்காந்திருந்தேன் . என் கிராமமான விசுவன் பள்ளத்திலிருந்து பக்கத்துக்கு நகரம் சென்று  பஸ்சை பிடிக்க  முக்கால் மணி நேரம்  இருந்தால் போதும். ஆக, நேரம் இறுக்கிரதேன்று யோசித்த வண்ணம் இருந்தேன்.என் அம்மாள் ஆடுகளை கட்டி விட்டு பால் சொசைட்டியிலிருந்து பால் வாங்கி வர சென்றிருந்தாள். நான் ஆடுகளை பார்த்த வண்ணம் இருந்தேன். செல்லும் முன் எத்தனை மணிக்கு பஸ்சு  என கேட்டு கொண்டே சென்றாள்.

என் அம்மாளுக்கு ஆடுகளும், செடிகளுமேன்றால் கொள்ளை பிரியம். வீட்டில் இருக்கும் ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் பேர் வைத்து தான் அழைப்பாள். இருப்பது மூன்று ஆடுகள். ஒன்று கருத்த நிறம் . அதற்கு கறுப்பி என்று பெயர். அதை பக்கதிலிருந்த சந்தையிலிருந்து வாங்கி வந்திருந்தாள். மிச்ச இரண்டும் தாய் மகள்கள். தாயின் பெயர் கெடாச்சி, மகளுக்கு பெயர் ராஜெசுவரி. குட்டி போடும் முன்னமே சந்தையிலிருந்து, நிறை மாத வெள்ளாடாக கெடாச்சியை வாங்கி வந்திருந்ததாள், அது இங்கு தான் குட்டி போட்டது. இது இங்கு பிறந்ததால் என்னமோ இந்த மகள் ஆட்டிருக்கு (ராஜெசுவரிக்கு) மட்டும் வீட்டில் தனி மரியாதை.  அதென்ன, மத்ததெதுக்கெல்லாம்  கெடாச்சி, கருவாச்சி, இது மட்டும் என்ன ராஜெசுவரி என கேட்டால், ஆமா... அது செல்ல குட்டி, அதான்ன்ன், என சிரித்து கொண்டு சொல்வாள். அதை இப்போது வரை, கயிரிட்டு கட்டுவதில்லை. எப்போது பார்த்தாலும், வீட்டிற்குள் சுத்துவதே அதற்கு வேலை, அவள் அம்மா ஆட்டிடம்  பால் குடிக்க சென்ற வண்ணம் இருப்பது, பக்கத்துக்கு வீடு வண்ணாத்தி ஆடுகளை கத்தி கத்தி கூப்பிட்டு கொண்டே இருப்பதென ஏதேனும் ரகளை செய்து கொண்டே இருக்கும். பக்கத்துக்கு வீட்டு வண்ணாத்திக்கும் எங்களுக்கும் முதலில் (அவள்) ஆடு (எங்கள்)செடி தின்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. அவளுக்கு, எங்களை விட ஆடுகள் அதிகமிருந்தன, அனால் எங்களுக்கு  ஆட்டுடன், செடிகளுமிருந்தன. அவளுடைய மந்தையிலும் இவளை போன்ற சிறு வயது கயிர் இடாத குட்டிகள் செடிகளை தின்பதால், என் அம்மா முதலில் கத்திய படியும் சண்டையிட்ட படியும் இருப்பாள். அனால், இப்போது  இவள் ஆட்டால் என்னமோ, செடிகளை சுற்றி தனி முள் வேளி போட்டிருந்தாள். முன்பெல்லாம் ஊருக்கு செல்லும் போது ஆடு, செடிகளை தின்பதே பெரிய புகாராக இருக்கும். இப்போது, ராஜெசுவரி இவர்களை நண்பர்கள் ஆக்கி விட்டால் போலும். அதிகம் இது குறித்த புகார்கள் இப்போது வருவதில்லை.


ராஜெசுவரி கருப்பியை வம்பிழுத்த படி அதை வட்டமிட்ட படி சுத்தி கொண்டிருந்தது. சற்று நேரத்தில், என் அம்மாவும் வந்து விட்டாள், வந்து காப்பி வைக்க பாத்திரம் விளக்கி கொண்டிருந்தாள். நான் இன்னும் வாசலில் இருந்தபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அந்நேரத்தில், என் அம்மாவுடன் சர்ச்சுக்கு போகும் மாதாரி இன (SC Caste எனவும் தாழ்த்தப்பட்டவர்கள் எனவும், முன்பு கூறப்பட்டவர்கள்),  முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி எங்கள் வீட்டிற்கு சைக்கிளை தள்ளியபடி வந்தாள். அவள் விசை தறிக்கு  கூலிக்கு செல்வபள் போலும். கூட மிச்சமிருக்கும் நேரத்தில், தென்னை ஓலை பின்னுவாள் என அவள்  என் அம்மவுடன் பேசிய உரையாடலில் தெரிந்தது. வந்த உடன் என்னை நலம் விசாரித்தாள். வழக்கம் போல, பெங்களூரில் வெய்யில்  எப்படி என கேட்டு வைத்தாள். நானும் என் பள்ளி பருவத்தில் சர்ச்சுக்கு சென்றதால், இவள் குறித்த முன் அறிமுகம் இருந்தது. சிரித்த வண்ணம் அவளிடம் வேலை எப்படி செல்கிறதென என் பங்கிற்கு நானும் கேட்டு வைத்தேன்.


பேசியபடி என் அம்மா காப்பியை எடுத்து கொண்டு வாசலுக்கு வர அவள் கையில் மூன்று தம்ளர்கள் இருந்ததை நான் கவனிக்க தவறவில்லை. எனக்கு சற்று ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த வண்ணம் இருந்தது. ஏன் எனில், எங்கள் இன மக்கள் மாதரிகளுக்கு சம உரிமை தந்ததை இன்று வரை நான் பார்த்ததில்லை. முதலில், அவர்களுக்கென தனி தென்னந் தொட்டி இருக்கும். பின், இவர்களுக்காய் ஒரு தனி தம்ளரை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். அனால், அம்மா  தம்ளரை வீட்டினுள் இருந்து தான் கொண்டு வந்தாள். காபியை மூன்று தம்ள்ர்களில் ஊற்றி, எனக்கும் அவளுக்கும் தந்து விட்டு, தனக்கும் ஒன்றை எடுத்து கொண்டாள். எப்படி என யோசிக்கும் முன், சர்ச்சுகளில், எல்லோரும் ஒன்றாய் காபி குடிப்பதையும், ஒன்றாய் உண்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனாலும், என் அம்மா வீட்டிலும் தந்ததை பார்த்தவுடன், நான் முதலில் தயங்கியதை நினைத்து பின் நான் எனக்குள் வருந்தினேன், "நீ இன்னும் வளரனும் தம்பி" ன்னு என்னுள் நினைத்துக்கொண்டேன் . நான் நிறைய மாதாரி இன மக்கள், கிறித்துவர்கலாக மதம் மாறியதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்குள் உண்டான இந்த புது மத அறிமுகம், ஜாதியை ஒழித்து  ஒரு குடை கீழ கொண்டு வருவதால், இம்மக்கள் அதிக மத மாற்றம் செய்ய முனைகிறார்களோ என மனதில் நினைத்து கொண்டேன். இருப்பினும், ஏசுவிற்கு  என் மரியாதைகள்.

ஏனோ, அந்த பெண் வாசலியே இருந்தாள். அவள் என் வீட்டிற்குள் சென்றிருக்கிறாளா என இன்னும் தெரியவில்லை. என் அம்மாவை, இது குறித்து அடுத்த முறை விசாரிக்க வேண்டும்.  வாசலில், அவர்கள் பேசுகையில், அவள் மகன் குறித்த பேச்சு இடையில் வந்தது. அவள் மகன், ஆறாம் வகுப்பு படிப்பதாகவும், அதிலும் அவன் மகனை 'B'
வகுப்பில் போட்டு விட்டதாகவும் இடையில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் என் அம்மாவிடம் 'B' வகுப்பில் இருக்கும் பையன்கள் ஒரு வேலை தாழ்தபட்டவர்களோ என கேள்வி கேட்டு கொண்டிருந்தாள். நான் இடை சென்று, அப்படி எதுவும் இல்லை என்றும், அரசு பள்ளிகளில் இது போல நடக்க வாய்ப்பே இல்லை என்றும் , அப்படி செய்யும் ஆசிரியர்கள் பணி  நீக்கம் நிச்சயம் செய்ய படுவார்கள் என சொன்ன பின் சரி என்றாள்.
இருப்பினும், இக்கேள்வியை அவள் கவலையாய் கேட்டதாய் தெரிய வில்லை.

பின்  மண்டையில் டிங் கென்று ஏதோ சொல்ல மணியை பார்த்தால் கிட்டத்தட்ட அது  எட்டை நெருங்கி கொண்டிருந்தது. நான் அவசரமாக துணிகளை எடுத்து கொண்டு அம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்பினேன். வழக்கம் போல அம்மா, சேர்ந்தவுடன் அழைக்க சொன்னால் (போனில்).

வந்து நகர பேருந்தை பிடித்து 8.45 கு எல்லாம் வந்து விட்டேன். பின் வழக்கம் போல, யாருடனாவது கடலை போடலாம் என நினைத்து கை பேசியை எடுத்த பின் தான் அது உரியற்று கிடந்தது தெரிந்தது. அப்போது தான் 'பின் சூ..'  தேயும் வரை சும்மா உக்கர்ந்திருந்தும், கை பேசியை உயிரூட்ட மறந்தது தெரிந்தது.

போனும் இல்லை, இன்னும் அரை மணி பாக்கி இருக்கிறது. என்னடா இது, பயங்கர மொக்கை டா , என என்னை நானே திட்டி கொண்டு ஒரு ஐந்து நிமிடம் நின்றிருந்தேன். மனம் நிலை கொள்ள மறுத்த படியே இருந்தது. பிறகு, ஏதேனும் பருவ மங்கைகள் நம் பேருந்தில், வருகிறார்களா என நோட்டமிட்டேன். என் போதாத காலம், எல்லோரும் ஆண்களாகவே இருக்க, வெறுப்பின் ஒட்டு மொத்த உச்சத்தை நெருங்கி கொண்டிருந்தேன். மொத்தமுள்ள கூட்டத்தில், இரண்டே பெண்மணிகள், இருவரும் கையில் தங்கள் கை குழந்தைகளுடன்.

 வாழ்க்கைல , வந்த 'மொக்க நாள் கவுன்ட் ல இன்னிக்கு ஒன்னு ஜாஸ்தி டா மாப்ளே' நு மனசுக்குலயே நினைத்து கொண்டேன்.


பேருந்தின் உள் விளக்கு ஏற்றப்பட வில்லை. மணி 8.30. வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன், அம்மா இரண்டு மூன்று முறை சாப்பிட சொல்லி நச்சரித்தாள்.நான் மாலை மூணு மணி வாக்கில் தான் சாப்பாடும் பீட்ரூட் பொறியலும் வயிறு முட்ட சாப்பிட்டதால் சாப்பிட மனம் கோணவில்லை , எத்தனை முறை தான் தின்பது என அம்மாவிடம் எரிந்து விழுந்தேன். சமீப காலமாக நான் அம்மாவிடம் கோபப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏன் கோபம கொள்கிறேன்?, சமயத்தை எதிர் கொள்ள இது சுலபமான வழியோ?. முதலில வரும் பயம், பின் கோபமாக உருமாறுகிறதோ? இருக்கலாம். இது கேட்க காமெடியான விஷயம் தான்,  இருந்தாலும் நடப்பதேன்னமோ இதுதான். அந்த இடத்தில உடனடியாக  தேவைப்படும் தற்காலிக முடிவை வெல்ல, கோபம் நிச்சயமாக உதவும். அதில் மாற்று கருத்தில்லை, இதில் யார் அதிக கோபம கொள்கிறார்கலோ அவர்களே பந்தயத்தில் வென்றவர்கள். இதை ஒரு வேலை என் மாமாவிடமிருந்து கற்று கொண்டேனா என்றும் தெரியவில்லை. காரணம், அவர் மிகவும் கடுமையான கோபக்காரர், எனக்கு தெரிந்தவரை அவர் கோபம, வீட்டில் உள்ள எல்லோரையும்  அடக்கி விடும. என் அம்மாவும் கூட முன் கோபிதான். ஏன் அவள் அம்மாவும் முன் கோபி தான். ஒரு வேலை இது எங்களுக்கு பரம்பரை வியாதியா என தெரியவில்லை. அனால் ஏன் மாமாவை தவிர மற்ற அனைவர் கொள்ளும் கோபமும் நான் மேற்சொன்னதை போலவே இருக்கும்,  அனால், மாமாவின் கோபம சற்று வித்தியாசமானது. முதலில் அசாய அமைதி காத்து, பின் வெடிக்கும் . இதனால், எல்லா முறையும்  வெல்வது அவர் தான்.

இப்போது வயிறு என்னமோ பசிப்பதாய் தெரிகிறது. என்ன செய்ய, சுற்றும்  முற்றும் பார்த்ததில் ஒரு தள்ளு வண்டி கடையை அருகில் பார்க்க முடிந்தது. சரி ஏதேனும் சாப்பிடலாம் என சென்றேன். வரும் போது நிச்சயம் குடிப்பதற்கு தண்ணீரோ அல்லது குளிர் பாணமோ வாங்க வேண்டும் என மனதில் நினைத்து கொண்டேன். இரண்டு பரோட்டக்களை மட்டும் உண்ண முடிந்தது, குடி நீரையும் வாங்கி கொண்டு திரும்ப பஸ் நின்ற இடத்திற்கு வந்தேன்.


பஸ்சின் உள்விளக்கு இன்னும் ஏற்றப்படவில்லை. அனால், இப்போது பஸ்சின் மேலே இரண்டு கூலி ஆட்கள், பார்சல்களை அடுக்கிய வண்ணம்  இருந்தனர். வந்து, வேறு ஏதும் இல்லாததால் அவர்களையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். இருவரும் பார்சல்களை நேராக இடைவெளி இன்றி அடுக்கிய வண்ணம் இருந்தனர்.  பார்செல்களின் அளவிற்கு ஏற்றவாறு இடைவழி ஏற்படுத்தியும்  அடுக்கினர். பார்சல்கள் மொத்தமும் இரண்டு அடுக்குகளாக வைக்கப்பட்டது. அடுக்கிய பின், பார்சல்களை மூட  வெளியே உள்ள சிறிய பகுதியில் நின்ற வண்ணம் தார் பாயை விரித்தனர். (பார்சல் வைப்பதற்கான பிரத்யேக பகுதி அநேகமாக தொன்னிற்றி எட்டு சதவிகித இடத்தை பிடித்திருந்தது). அவர்கள் நின்ற விதம் பார்த்தவுடன், என் மனம் குப்பென்று அடைத்தது. எனக்கு சிறு வயது முதலே உயரத்தின் உச்சியில் நின்றாலோ ஏன் நிற்பதாய் கற்பனை செய்தால் கூட ஆசன வாய் அடைப்பதாய் உணர்வேன் , அந்நேரத்தில் தொண்டை சட்டென்று அடைப்பதை  போலவும் , நெஞ்சும் குப்பென்று அழுத்துவதாகவும் உணர்வேன். இந்த உணர்வு,ஏறக்குறைய எனக்கு பயத்தின் உச்ச சாயலை காட்டும். சில சமயங்களில், கனவுகளில் மலை உச்சியில் இருந்து எட்டி பார்ப்பதாய் வரும் கனவுகள் கூட அடுத்த சில நாட்களுக்கு மறக்காமலே இருக்கும். அனால், இவர்கள், லாவகமாய் காலை ஒன்றின் பின் ஒன்றாக நகர்த்திய வண்ணம், தார் பாயை மூடியது கண்டு மனதில் பயம் கலந்த வியப்பை அடைந்தேன். அவர்கள் நடக்கையில், இடை இடையே பஸ்சிற்கு கீழே நிற்கும் வண்டிகளை பார்த்து, ஒரு வேளை  இவர்கள் கீழே விழுந்தால் எப்படி விழுவார்கள், எந்த வண்டியில் மோதி அவர் உடம்பின் எப்பகுதி அடிபடும் என்ற நினைவு நோக்கி பயம் அலையோட தொடங்கியது. என்ன இது, கேனத்தனமா நேனைகிறேனோ எனவும் தோன்றியது.நினைப்புகள் அதாவது கற்பனைகள் உண்மையாகாது எனவும் சொல்ல முடியாது.  கற்பனைகள் நிஜத்தின் புறத்தோற்றம் மட்டுமே. ஆனால், நிஜத்தை விட பலமடங்கு பூதாகரமானது கற்பனை. என்னை பொறுத்தவரை, கற்பனை இல்லை என்றால் காமமும் இல்லை, பயமும் இல்லை. (ஏன் இங்கு காமம் வருகிறது?? :) )

இது ஒரு பக்கம் போகையில், இருபது வயது மதிக்கத்தக்க ஒருவன் ஒரு பாலிதீன் பையை கொண்டு வந்து பஸ்சினுள் சர சரவென்று ஏறினான். பின் இறங்கி, எலுமிச்சம் பழத்தை எடுத்து பஸ்சின் நான்கு சக்கரங்களிலும் அடியில் வைத்தான். ஊதுவர்தியை கொளுத்தினான். மாலை இட்டான். அனைத்தும் முடிகையில், கடைசியாக, ஒரு 40 கிலோ எடையுள்ள 45 வயது மதிக்கத்தக்க டிரைவர்  வந்து ஏறினான், ஏறியதும், பும்ம் பும்ம் என ஹார்ன் குடுத்து, சீக்கிரம் சீக்கிரம் நேரமாகுது என கூப்பாடு போட ஆரம்பித்தான். இவன் என்ன பெரிய புடுங்கியா, அவன் மேல என்ன சும்மாவா நிக்கறான், என்னமோ வந்தான், இவன் பாட்டுக்கு திட்டறான், என மனதில் நினைத்தேன். அவன் கூப்பாட்டை கேட்டதும், இரண்டொரு நொடிகளில், மேல் நின்ற அந்த இருவரும் பார்சல்கலை  கட்டி விட்டு கீழிறங்கினர். டிரைவரின் செய்கை, ஏறக்குறைய என்னுடைய முந்தைய மேனேஜர்-ஐ  நினைவூட்டியது. அதிகாரம் செய்ய நினைப்பவர்கள், முதலில் கற்று கொள்ள வேண்டியது அதட்டல் தானோ? அது தான் சாதிக்க நினைத்ததை பிறர்  மூலம் சாதிக்க வைத்து, பின் அதை தானே செய்ததாகவும் கூட நினைக்க வைக்கும் போல.  சமீபத்தில், நாளைய இயகுனரில் 'பெட்டி கேஸ்' படம் பார்த்தேன். அதில், ஒரு கடைமட்ட காவல் அதிகாரி சைக்கிளில் சென்று, திருடனை பிடிக்க பல சூழ்ச்சிகள் செய்து, கடைசியாக திருடனை பிடிப்பார், ஆனால், இறுதியில், அவன் மேலதிகாரி,  திருடனை தான் பிடித்ததை போல பத்திரிக்கைக்கு போஸ் கொடுப்பார். Survival of the fittest இது தான் போல.

அவர்கள் கீழே இறங்க, நான் பஸ்சில் ஏறினேன். ஆண்டவா படத்தை போட்டு மொக்கை போட்டுற வேணாம், எனக்கு தூக்கமும் நல்லா வருதுன்னு நினைச்சுட்டே என் சீட்டிற்கு வந்தேன். அது, சரியாக, பின் சக்கரத்திற்கு மேலே உள்ள இருக்கை, இருப்பினும் இது பலூன் வசதி கொண்ட  பஸ் என்பதால், பிரச்சனை ஒன்றும் இல்லை. எனக்கு அருகில் நல்ல ஆஜானு பாகுவான ஒருவன் இருந்தான். இருக்கை 2x1 என்பதால், கை வைக்கும் இடத்திற்கு பிரச்சனை  வரவில்லை. நல்ல தூக்கம்.

இப்போது எனக்கு இடது புறம, குழந்தையுடன் சிகப்பு சேலை அணிந்த பெண்மணி, தன கணவனுடன் உக்கர்ந்திருந்தாள். முன்னிருக்கையில், இன்னொரு பச்சை நிற சேலை அணிந்த பெண் மணி உக்கர்ந்திருந்தாள். சிகப்புநிற சேலை அணிந்த பெண், தன கணவனுடன் ஏதோ பேசி கொண்டும் சிரித்தவாறும் வருகிறாள். குழந்தை நல்ல கலராக அழகாக இருந்தது. குழந்தை ஒரு கட்டத்தில், என்ன பார்த்து சிரிக்க, நான் குழந்தையை வாங்க முயற்சிதேன். அதுவும் வந்தது. முன் சீட்டில் உள்ள குழந்தை என்னை பார்த்தும் இந்த குழந்தையை பார்த்தும் சிரிக்கிறது. குழந்தையை கொஞ்சியவாறு, எதேச்சையாக திரும்புகையில், என்னிடம் குழந்தையை குடுத்த தம்பதி இல்லை. எனக்கு, நெஞ்சு பட பட வென அடித்து. நான் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிப்பதற்குள், பஸ் அநேகமாக பெங்களூரை அடைந்து விட்டிருந்தது. நான் டிரைவரிடம் நிலைமையை விளக்கி, வண்டியை நிப்பாட்ட முனைவதற்குள், பஸ்ஸில் பெரும் கூப்பாடு, அப்போது ஒரு கொசு திரும்ப, திரும்ப கடிக்க திடீரென்று விழித்து பார்த்தேன். மணி அதிகாலை 4.


வண்டி நிற்கிறது. ஏன் வண்டி நிற்கிறது?. கேட்கவும் பார்க்கவும் மனம் இல்லை. தூக்கம் கண்ணை சொக்குகிறது . அதற்குள் கொசுவும் திரும்பவும் கடிக்கிறது. இரண்டும் கெட்டான போல, மறுபடியும் கோபம கொப்பளித்தது. 'சொம்பை நாய், எதுக்கு இவன் இப்படி கொசு கடிக்கற இடத்துல பஸ்சை நிறுத்தி வைச்சுருக்கான் ' நு மனதில் டிரைவரை திட்டபடி  கீளிறங்கினேன். நான் உக்காந்திருந்த இருக்கைக்கு நேர் கீழே உள்ள சக்கரம் பஞ்சர் ஆகி இருந்தது. பஸ்ஸில், டிரைவர் மட்டும் தான் இருப்பான் போல, அந்த ஊதுவர்த்தி கொளுத்திய பய்யன் வர வில்லை போலும், இவன் ஜாக்கியை மட்டும் மாடி விட்டு, போனில் யாரோ ஒருவனுக்கு நிலவரத்தை சொல்லி கொண்டிருந்தான். சற்று நேரத்தில் , ஒன்று இரண்டு என அந்த கம்பெனி பஸ்கள் வந்தன. அதில் இருந்த, ஒரு டிரைவர சக்கரத்தை துரிதமாக மாட்டினார். இந்த டிரைவர் அப்போதும் சும்மா இருட்டிற்கு லைட் பிடித்தபடி நின்றிருந்ததான். என்ன சொல்ல. ஐந்து நிமிடத்தில் சக்கரம் மாற்றப்பட பஸ் கிளம்பியது. ஒரு வழியாக வீடு வந்து சேர மணி 7.30 ஐ நெருங்கி விட்டது. வீட்டிற்கு வரும் போது, நிஷாந்த அலுவலகம் செல்ல தயாரானபடி இருந்தான், இன்னொரு அறை  நண்பனான மதுரை தூங்கியபடி இருந்தான்.

நானும் வந்தவுடன் குளித்து அலுவலகம் செல்ல தயாரானேன்.

முற்றும்.

2 comments:

  1. Chandru... vakkiyangal nandraga amaithu ullai... nalla flow iruku.. keep writing.. u rock :)

    ReplyDelete
  2. ஊக்குவித்தமைக்கு நன்றிகள் மினி :)

    ReplyDelete