Sunday, 8 September 2024

விண்மீன்கள் எல்லாம்
போர்க்கூட்டம் செய்கின்றன

முழுமதி கூட சற்றே 
பரபரப்புடனே
தென்பட்டது

பூத்துக்குலுங்கும்
பூக்கள் கூட
ஏனோ சற்றே
வாடித்தான்
கிடக்கின்றன

ஏன் என 
வினவியதில்
தான்
தெரிந்தது

தேவதை பிறந்த
நாளையை
அழகின் தினமாய்
அனுசரிக்க

தேவதையின் உலகத்தில்
தீர்மானம் ஆகிறதாம்

அதைத்தெரிந்து 
கொண்டுதான்
இதுகாரும் திழைத்துக்
கிடந்த
இவை யாவும்
இன்று
சோகத்தால்
மூழ்கிக்கிடக்கின்றனவாம்..




இன்று தான் கண்டேன்..

விண்மீன்கள் எல்லாம்
ஏனோ இயல்பை விடவும்
அழகழகாய் மின்னுகின்றன.

சந்திரனும் கூட
இயல்பை விட்டு
இன்று
ஏனோ
பலபலப்பாய்
ஜொலிக்கின்றது.

பூக்களும்கூட
பெரும் வாசத்துடன்
இன்று
குதூகலித்து
சிரிக்கின்றன.

ஏன் என
கேட்கையில் தான்
கூறின.

இன்றுதான்
தேவதை பிறந்தாளாம்
அவளின்
பிறந்தநாளன்று
அவளின்
அழகுடன்
ஈடுசெய்யத்தான்
இத்துணை அழகாய்
ஜொலிக்கின்றனவாம்..

இன்று தான் கண்டேன்  

விண்மீன்கள் எல்லாம்  

ஏனோ இயல்பை விட்டு  

அழகழகாய் மின்னுகின்றன.  

சந்திரனும் கூட  

இயல்பை விட்டு  

இன்று  

பலப்பப்பை  

ஜொலிக்கின்றது.  

பூக்கள்கூட  

இயல்பை விட்டு  

இன்று  

குதூகலித்து  

சிரிக்கின்றன.  

ஏன் என  

கேட்கையில் தான்  

கூறின.  


இன்று தான்  

தேவதை பிறந்தாளாம்.


Tuesday, 3 September 2024

தொலைதூர நிலா

தொலை தூரம்
தொலை தூதூரம்ம்
தொலைந்து விடும் தூரம்
சென்று விட்டதாய்த்தான்
இதுகாரும் நினைத்திருந்தேன்

விழித்துப் பார்க்கையில்
தான் தெரிகிறது
இவ்வளவு தூரமும்
வட்டப் பாதையிலே
உன்னைச் சுற்றியிருக்கிறேன்
என்று..

-சந்திரன்

Saturday, 3 August 2024

காந்தமும் தேவதைகளும்

கேள்விப்பட்டிருக்கிறேன்
காந்தங்களுக்கு ஈர்ப்புவிசை
மிக மிக அதிகமாம்..
அருகில் செல்லச்செல்ல
அது பொருட்களை
வெகுவலுவாய்
வலுவிசையுடன்
ஈர்க்குமாம்

பாவம்
அக்காந்தங்களுக்குத்
தெரியவில்லை
தேவதைகளின்
ஈர்ப்பு விசை பற்றி

பல காதம் கடந்தும்
வேறு எச்சிந்தனைக்கும்
இட்டுச் செல்லாமல்
அசராமல்
சுண்டி இழுக்கும்
தேவதைகளின்
ஈர்ப்பு விசை பற்றி
தெரியவில்லை போலும்
அவ்வற்ப காந்தங்களுக்கு

தெரிந்தால்
ஒருவேளை
துக்கம் தாளாமல்
தூக்கிட்டுக் கொள்ளுமோ
என்னவோ,

பாவம் அற்ப காந்தங்கள்..

Wednesday, 28 February 2024

ஈர்ப்பு விசை

விசையுறு பந்தைப்போல
ஏதேனும் ஒரு விசையினைப் பற்றி
வெகு தொலைவு 
தொலைந்துவிடத்தான்
தினம் தினம் தான்
எத்தனித்தாலும்..

எவ்வளவு எவ்வளவு தான் விசையினை உந்தி
மேல்தான் வேகம்
சென்றாலும்
ஒரே ஒரு சிறு சறுக்கலில்
தொடங்கிய இடத்திற்கே
வெகு வேகமாய்
மீண்டும் வருகிறேன்..

பால்வெளியை சூரியன் சுற்ற
சூரியனை பூமிக்கோள் சுற்ற
பூமியை சந்திரன் சுற்ற
எனப்பாடம் படித்தாலும்
ஆனால் என் மனம் என்னவோ
உனையேதான
தினம் தினம்
சுற்றி வருகிறது..

-சந்திரன்