நீ தேடும் ஒன்றை
ஒருபோதும்
நான்
உனக்குப்
பரிசாய்த்
தர மாட்டேன்..
அமைதியையும்
ஆனந்தத்தையும்,
வசந்தத்தையும்
வாழ்வையும்,
ஏன்..
அனைத்திற்கும்
மேலாய்
விளங்கும்,
வாழ்வின்
அர்த்த்தைக்
கூடவும்
உனக்குப்
பரிசாய்த் தருவேனே
ஒழிய..
நீ தேடும் ஒன்றை
ஒருபோதும்
நான்
உனக்குப்
பரிசாய்த்
தர மாட்டேன்..
(கீதை
சூசகமாய்
உணர்த்தியது..)
-சந்திரன்.
No comments:
Post a Comment