ஏதோ ஓர் பௌர்ணமியில் ..
பகலின் அடர் சூடெல்லாம்
சிலிர் காற்றாய் மாறி
வீசும் சாலையில்..
காதில் பாடல் ஒலித்தபடி ..
நிலவுடன்
கைகோர்த்தபடி
சிறு வண்டியில்
செல்லும் குறும் பயணம் ..
நிஜத்தில்
ஒரு ஜென்மத்தின்
சிலிர்ப்பை எல்லாம்
மொத்தமாய்
ஒரு சிறு குப்பிக்குள்
அடைத்து
ஓரே மடக்கில்
பருகியதாய்
உணரும்
நிகர் அனுபவம்.
-சந்திரன்
No comments:
Post a Comment