விடாமல் முயன்றும்
ஏனோ
நாளையின் புதிரை
என்னால் சற்றும்
அவிழ்க்க இயலவில்லை..
தோற்றுத் தோற்றுத்
தொடர்ந்தபடியே
நானிருக்க
புதிரும் ஏனோ
எனை
சற்றும் விடாமல்
அலைக்கழித்தபடியே
அள்ளிச் செல்கிறது..
-சந்திரன்
No comments:
Post a Comment